நடேஸ்வராக் கல்லூரி முன்னாள் ஆசிரியை திருமதி பரஞ்சோதி காலமானார்

 

காங்கேசன்துறை, நடேஸ்வராக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியை ”பரஞ்சோதி ரீச்சர்”
இன்று இலண்டனில் காலமானார். ‘பரஞ்சோதி ஆசிரியை’ நடேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவர் காலஞ் சென்ற சட்டத்தரணி சதாசிவத்தின் மகளும் பரஞ்சோதி ஆசிரியரின் துணைவியுமாவார். இவர் நீண்ட காலமாகக் குடும்பமாக நடேஸ்வராக் கல்லூரியின் அருகாமையில் வசித்து வந்தவர் ஆவார். இவரது மூன்று பிள்ளைகளும் நடேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் எனபதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அன்னாரின் மறைவுக்கு நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா தனது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு பரஞ்சோதி மாஸ்ரர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அநுதாபங்களயும் செலுத்துகிறது.

Add Comment