நடேஸ்வரா மாணவர் ஒன்றுகூடலும் கலந்துரையாடலும் – கொழும்புக் கிளை

அன்புடையீர்,

நடேஸ்வரா எதிர்கால வளர்ச்சித்திட்டத்திற்கான பழைய மாணவர் ஒன்றுகூடலும் கலந்துரையாடலும்!!

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவோடு மனம் விட்டுப் பேசுவோம்!

 

உரிமையுள்ள உடன்பிறப்பே! எமது கல்லூரி பல இன்னல்கள் மத்தியிலும், மக்கள் மீள்குடியேற்றம் முற்றுப்பெறாத சூழலிலும், தன்னந்தனியாக சுற்றுச்சூழல் சூனியமாக இருந்தபோதும், அதனையும் பொருட்படுத்தாமல் சிறுதொகை மாணவர்களுடன் சிரமத்துடன் இயங்கி வருகிறது. எமக்கு கல்வியூட்டிய கல்லூரித்தாய் கலங்கி நிற்க பேதைகள் போல் நாம் பேசாமல் இருப்பதா? இனிமேலும் பொறுப்பதா? இயலாமல் இருப்பதா?

நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக்கிளை அண்மையில் எடுத்த தீர்மானத்தின்படி, கல்லூரி வளர்ச்சித்திட்டங்களை ஆராய்வதற்கும், கல்லூரி சுற்றுச்சூழலில் மக்கள் மீள்குடியேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் , எமது காப்பாளரும், பழைய மாணவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தி அவருடைய ஒத்துழைப்புடன் நூறாண்டு பழமைவாய்ந்த எமது கல்லூரி செயற்பாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நடேஸ்வரா கொழும்புக்கிளையின் வேண்டுகோளுக்கிணங்க கொழும்பில் நடக்கவிருக்கும் பழைய மாணவர் ஒன்று கூடல் நிகழ்வில் மாவை சேனாதிராசா அவர்கள், தான் கலந்து கொள்வதற்குரிய விருப்பத்தை பொறுப்புடன் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளார். புதுவருடம் பிறந்ததும் உரிய திகதி, நேரம் சம்பந்தமாக உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தயவுசெய்து எமது நடேஸ்வரா தாயின் புன்னகையை காணும் நோக்குடன் நடக்கும் இன்நிகழ்வில் நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் யாவரும் கலந்துகொண்டா ல் சிறப்பாக அமையும் என்று கருதுவதால், ஒன்று கூடல் நிகழ்வில் உங்கள் வரவு சம்பந்தமாக முன்னறிவித்தல் தந்தால் கூட்டதிற்குரிய மண்டப வசதிகளைச்செய்வது சுலபமாக இருக்கும்.
நிகழ்வு நடைபெறும் இடம், காலம், நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.
இதுவரை எம்முடன் தொடர்பின்றி இருப்பவர்களும் இந்த அழைப்பை ஏற்று இணைந்து செயற்பட வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி!
சி.இலிங்கவேலாயுதம்
செயலாளர்

Add Comment