நடேஸ்வராக்கல்லூரி – காங்கேசன்துறை

நடேஸ்வராக்கல்லூரிகாங்கேசன்துறை

 

 

 

கல்லூரி வீதிக்கு வடக்குப் புறத்தில் கனிஷ்ட பாடசாலையும், தெற்குப் புறத்தில் உயர்தர பாடசாலையும் என்ற வகையில் நடேஸ்வராக் கல்லூரி இரு பாகங்களாக  அமைந்திருந்தனகாங்கேசன்துறை நகரத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல, கிழக்கே கீரிமலை, போயிட்டி, மேற்கே மயிலிட்டி, பலாலி, தெற்கே மாவிட்டபுரம், கட்டுவன், குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் பல மணவர்கள் இங்கே வந்து கல்வி கற்றனர். இதைவிட சீமெந்துத் தொழிற்சாலையில் உத்தியோகம் பார்த்த பல வெளி மாகாணத்துப் பெற்றோரின் பிள்ளைகளும் இங்கே வந்து கல்வி கற்றனர். 


அரசாங்கம் பாடசாலையைப் பொறுப்பேற்கும்வரை திரு.தம்பிப்பிள்ளை, மாவிட்டபுரத்தைச் சேர்ந்த திரு. சிவஞானம் ஆகியோர் தொடக்கத்தில் நடேஸ்வராக் கல்லூரியின் முகாமையைளர்களாகக் கடமையாற்றினர்.


திரு. சின்னத்தம்பி, இடையாற்று மங்களம் திரு.சுப்ரமணிய ஐயர், இடையாற்று மங்களம் திரு.சூடாமணி ஐயர், திரு. கந்தசாமி, திரு. மார்க்கண்டு, திரு. கிருஷ்ணபிள்ளை, திரு. சிவப்பிரகாசம்திரு. சோமசுந்தரம், திரு.கனகநாயகம், திரு.பாலசிங்கம் திரு.குலசேகரம்  போன்றோர் நடேஸ்வராக் கல்லூரியின் உயர்தரப் பாடசாலையில் அதிபர்களாகக் கடமையாற்றியுள்ளார்கள்

நடேஸ்வரா கனிஷ்ட பாடசாலையில் அக்காலத்தில் திரு. சபாபதிப்பிள்ளை, திரு. சிதம்பரப்பிள்ளை, திரு. கந்தையா, திரு. திருநாவுக்கரசு, திரு. மு.. குருநாதபிள்ளை ஆகியோர் அதிபர்களாக இருந்தார்கள்.


நடேஸ்வராக் கல்லூரி யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. குரு வீதிக்கு வடக்குப் பக்கமாகவும் சந்தை வீதிக்குத் தெற்குப்பக்கமாகவும், காங்கேசந்துறையாழ்ப்பாணம் பெரிய வீதி மேற்குப் பக்கமாகவும், கிழக்கே தொடர் வண்டிப் பாதைக்கு அருகாமையிலும் இக் கல்லூரி அமைந்திருந்தது. காலையும் மாலையும் உள்ளுர் தொடர்வண்டி ஒன்று அருகே உள்ள தரிப்பிடத்தில் நின்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏற்றிச் செல்வதுண்டு.

 

யுத்தம் காரணமாக இப்பகுதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வந்ததால் இக் கல்லூரி இடம் பெயரவேண்டி வந்தது. பாலர் வகுப்பில் இருந்து உயர்தர வகுப்புவரை இங்கே மாணவர்கள் கல்வி கற்றனர்

நேர்மை நெறி நில் என்ற கல்லூரி வாசகத்திற்கு ஏற்ப பல கல்விமான்களை உருவாக்கித் தமிழ் சமுதாயத்திற்குப் பெருமை தேடித்தந்திருக்கிறது இப்பாடசாலை.  உயர் பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டுக் கொண்டதால், மாணவர்களின் பாதுகாப்புக் கருதித் தெற்கு நோக்கி இப்பாடசாலை இடம் பெயரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது

Add Comment