அமரர் திரு துரைசாமி பாலசிங்கம் (முன்னாள் அதிபர்) – கண்ணீர் அஞ்சலி !

கண்ணீர் அஞ்சலி

அமரர் திரு துரைசாமி பாலசிங்கம்

[இளைப்பாறிய ஆசிரியர், அதிபர் – நடேஸ்வரக் கல்லூரி, காங்கேசன்துறை]

தோற்றம்: 20-07- 1929 மறைவு: 22-09- 2015

எமது பெருமதிபிற்குரிய, தகைமையும் பண்பும் நிறைந்த, ஆசிரியரும் அதிபரும் ஆகிய

திரு துரைசாமி பாலசிங்கம் அவர்கள் 22—09—2015 அன்று மறைந்த செய்தி நம் அனைவரையும் பெரும் துயரத்தில்

ஆழ்த்திவிட்டது.

திரு பாலசிங்கம் அவர்கள், எங்கள் நடேஸ்வரக் கல்லூரியிலேயே கல்வி பயின்று, தனது

இருபத்திஐந்தாவது வயதிலிருந்து இளைப்பாறும் வரை எமது ல்லூரியிலேயே ஆசிரியத்

தொண்டாற்றிய பெருந்தகையாளர். 1954 ஆம் ஆண்டு இந்தியாவில் தன் பட்டப்படிப்பை

முடித்தவுடன், நடேஸ்வரக் கல்லூரியில் தன் அரும் பணியினை தொடங்கினார்.

ஆங்கிலமும் தமிழும் போதிப்பதில் மிகவும் சிறப்புற்றிருந்த எமது ஆசிரியர், தனது

கண்ணியமான பேச்சினாலும், கௌரவமான நடத்தையாலும் எல்லா மாணவர்களினதும், சக

ஆசிரியர்களினதும் நன்மதிப்பை பெற்றார்.

நடேஸ்வரக் கல்லூரியில் மிக நீண்ட காலமாக ஆசிரியராக மிகச்சிறப்புற பணியாற்றிய பின்னர், எமது

கல்லூரிகே அதிபராகி அதனை மேலும்சிறப்புற மேம்படுத்தினார். 1983 ஆம் ஆண்டு நிகழ்ந்த

இனக்கலவரத்தின் போது சொல்லொணாத்துயரமுற்று வந்திறங்கிய அகதிகளுக்கு கல்லூரியிலே

புகலிடமளித்து, உணவளித்து, பராமரித்து, உபசரித்த அவரது பெரும்தொண்டு என்றென்றும்

அவருக்கும் எமது கல்லூரிக்கும் அழியா புகழைத்தரும்.

பெருமதிப்பிற்குரிய ஆசான் திரு பாலசிங்கம் அவர்களது மறைவால் எமது

நடேஸ்வரக்கல்லூரி அன்னை தனக்கு சிறப்பும், கௌரமும் தேடித்தந்த ஒரு

தவப்புதல்வனை இழந்து நிற்கிறாள். அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக!

நடேஸ்வரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம்

 

Add Comment