மறைந்த அதிபர் பொ.அமிர்தலிங்கம் நினைவஞ்சலி கூட்டம்

 

அண்மையில் காலமான காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி அதிபர் பொ.அமிர்தலிங்கம் அவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலிக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக ஏறத்தாள கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நடேஸ்வராக் கல்லூரி இடம்பெயர்ந்த சூழ்நிலையில் இயங்கி வந்தததை அனைவரும் அறிவார்கள். ஆனால் கடந்த வருடத்தில் இருந்து கல்லூரி தனது பழைய இடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. காலஞ்சென்ற அதிபர் அமிர்தலிங்கம் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பல்லாண்டுகளாகக் கல்லூரியின் அதிபராகச் செயற்பட்டு வந்துள்ளார். மற்றும் நீண்ட காலமாகக் கனடாவுக்கான நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்துடன் நெருக்கமான உறவுகளைப் பேணி அதன் மூலம் கல்லூரி வளர்ச்சிக்குத் தன்னாலான பங்கினையும் ஆற்றியுள்ளளார். துயரத்தில் ஆழ்த்தும் அவரது மறைவையொட்டி அவரது பணிகளையும், நினைவுகளையும் கௌரவித்து இந்த அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்களையும் இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

 

காலம்; ஏப்ரல் 2, ஞாயிற்றுக்கிழமை, 2017. முற்பகல் 10.00 மணி

இடம்; செந்தாமரை மண்டபம்
1160 Tapscott Road, Unit 2,3
Scarborough, ON, M1X 1E9

 

நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா