நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடை கால ஒன்று கூடல் நிகழ்வு!

2016, யூலை மாதம் 10 ஆம் திகதி நடேஸ்வராக் கல்லூரியின் ஒன்று கூடல் நிகழ்வு ஸ்காபரோ தொம்சன் பூங்காவில் இடம் பெற்றது.
காங்கேசன்துறை  நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். நடேஸ்வராக் கலலூரி மீண்டும் காங்கேசன்துறையில் பழைய இடத்திலேயே இயங்கத் தொடங்கியிருப்பதைப் பலரும் பாராட்டினார்கள்.

 

சிறியோர் பெரியோர் களுக்கான போட்டிகள் வைக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

 

                   

Add Comment